கட்டுப்பாட்டை இழந்த சீனாவின் விண்கலம் எங்கே விழக்கூடும்? ஆய்வாளர்கள் தகவல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

கடந்த 2011ம் ஆண்டு சீனாவினால் விண்ணில் ஏவப்பட்ட Tiangong-1 எனும் விண்கலமானது கட்டுப்பாட்டு அறையின் தொடர்பிலிருந்து விடுபட்டுள்ளமை தெரிந்ததே.

இதன் காரணமாக பூமியை நோக்கி மிக வேகமாக குறித்த விண்கலம் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

அடுத்துவரும் ஓரிரு மாதங்களுக்குள் Tiangong-1 விண்கலம் பூமியில் வந்து விழலாம் என ஏற்கணவே அனுமானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பூமியின் எப்பாகத்தில் இவ் விண்கலம் விழக்கூடும் என்ற தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளிலேயே விழக்கூடிய சாத்தியம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறிப்பாக எப்பகுதிகளில் விழக்கூடும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல், நியூயோர்க் மற்றும் மியாமி நகரங்களும் உள்ளடங்கலாக எந்தவொரு பகுதியிலும் விழலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்