பூமி கொளுந்து விட்டு எரியும்.. 20 ஆண்டுகளில் முடித்துவிடுங்கள்: ஹாக்கிங் எச்சரிக்கை

Report Print Santhan in விஞ்ஞானம்
325Shares

பிரித்தானியா விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் 2600-ஆம் ஆண்டில் பூமி கொளுந்துவிட்டு எரியும் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பெய்ஜிங்கில் நடந்த அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், பூமியில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் எரிபொருளின் தேவையும் அதிகமாகிறது. எரிபொருளின் தேவை அதிகமாவதால், பூமி வெப்பமாகிக் கொண்டே செல்கிறது.

இதே போன்ற நிலை நீடித்தால் 2600-ஆம் ஆண்டு பூமி கொளுந்து விட்டு எரியும் சூழ்நிலை ஏற்படும், இதன் காரணமாக பூமியில் தாவரங்கள், உயிரினங்கள் போன்றவை வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும்.

இருப்பினும் மனிதன் நினைத்தால் இன்னும் 10-லட்சம் ஆண்டுகளுக்கு வாழ முடியும் என்றும் அதற்கு மனிதர்கள் சூரிய மண்டலத்திற்கு அருகேயுள்ள ஆல்பா சென்டாரி என்ற துணை கிரகத்தில் குடியேற வேண்டும் எனவும் அப்படி இல்லை என்றால் புளூட்டோவிலும் மனிதர்கள் வாழலாம் என்று கூறியுள்ளார்.

சூரிய மண்டலத்துக்கு அருகே இருக்கும் ஆல்பா சென்டாரி கிரகம் பூமியில் இருந்து சுமார் 4.367 ஒளி ஆண்டுகள்(25 டிரில்லியன் மைல்) தொலைவில் உள்ளது.

இக்கிரகத்திற்கு சிறிய விமானத்தில் ஒரு வாரத்திற்குள் செல்ல முடியும் என்பதால், அதற்கான வேலையை இன்னும் 20 ஆண்டுகளில் செய்து முடித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் ஆல்பா சென்டாரி கிரகம், செவ்வாய் கிரகத்தை விட குறைத்த தொலைவில் தான் உள்ளது என்று சுட்டுக் காட்டினார்.

ஏனெனில் மக்கள் செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழலாமா? என்பதில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதால், இதை ஹாக்கிங் தெரிவித்திருப்பார் என்று கூறப்படுகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்