நாசாவின் அடுத்த ரோவர் விண்கலம் தொடர்பில் வெளியான புதிய தகவல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கியூரியோசிட்டி ரோவர் எனும் விண்கலத்தினை நாசா அனுப்பியிருந்தது.

இந்நிலையில் 2020ம் ஆண்டில் மற்றுமொரு ரோவர் விண்கலத்தினை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் முயற்சியில் நாசா விண்வெளி ஆய்வு மையம் இறங்கியுள்ளது.

இதில் சுமார் 23 கமெராக்களை பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னர் அனுப்பிய விண்கலத்தில் 17 கமெராக்களே பொருத்தப்பட்டிருந்தன.

அதிக அளவில் முப்பரிமாண புகைப்படங்களை எடுப்பதற்காகவே இவ்வாறு கூடிய கமெராக்கள் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்