டைனோசர்களை வேட்டையாடிய முதலை இனத்தினை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த விலங்குகள் தொடர்பில் விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கூர்ப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வுகளின் விளைவாக பல்வேறு வினோத உயிரினங்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

இவற்றின் தொடர்ச்சியாக தற்போது டைனோசர்களையே வேட்டையாடி உணவாக உட்கொண்ட முதலை இனம் ஒன்று பற்றி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இம் முதலைகள் சுமார் 95 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என ஊகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இவை சுமார் 20 அடிகள் நீளம் வரை வளரக்கூடியதாகவும் காணப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள Tennessee பல்கலைக்கழத்தின் ஆராய்ச்சியாளர்களே இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

இம் முதலைகள் வாழ்ந்தமைக்கான ஆதாரணமாக டெக்சாஸ் பகுதியில் எலும்பு படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்