சந்திர மண்டலத்திலிருந்து எடுத்து வரப்பட்ட அரிய பொருட்கள் ஏலத்தில்

Report Print Raju Raju in விஞ்ஞானம்

விண்வெளி வீரரான நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனிலிருந்து எடுத்து வந்த அரிய பொருட்கள் ஏலத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

அமெரிக்க விண்வெளி வீரரான நீல் ஆம்ஸ்ட்ராங் கடந்த 1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் திகதி அப்பல்லோ 11 ரக விண்கலம் மூலம் சந்திரனில் இறங்கினார்.

அவருடன் மற்றொரு விண்வெளி வீரரான புஜ் அல்ட்ரினும் உடன் சென்றார்.

இருவரும், அங்கிருந்து மண் துகள்கள், சந்திர மண்டலத்தின் 5 வெவ்வேறு இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட 12 பாறை படிவங்கள் போன்ற அரிய பொருட்களை ஒரு பையில் போட்டு கொண்டு பூமிக்கு எடுத்து வந்தார்கள்.

கடந்த 48 ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரனிலிருந்து எடுத்து வரப்பட்ட பொருட்களும், ஆம்ஸ்ட்ராங் மற்றும் அல்ட்ரின் இருவரும் கையொப்பமிட்ட நினைவுச்சின்னங்களின் புகைப்படங்களும், வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி நியூயோர்க்கில் ஏலத்தில் விடப்படுகின்றது.

இந்த அரிய பொருட்கள் 2 மில்லியன் டொலர் முதல் 4 மில்லியன் டொலர் வரை ஏலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments