வலிகளை அறியும் மூளையின் இரகசிய வலையமைப்பு கண்டுபிடிப்பு!

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
வலிகளை அறியும் மூளையின் இரகசிய வலையமைப்பு கண்டுபிடிப்பு!

மனித உடலில் நடைபெறும் அனைத்து விதமான செயற்பாடுகளுக்கும் மூளை பிரதானமாக விளங்குகின்றது.

அதேபோன்று உணர்வுகள் நரம்புகளின் ஊடாக கடத்தப்படுகின்ற போதிலும் மூளையே அதற்கான விளைவுகளை ஏற்படுத்துகின்றது என அறிந்திருப்பீர்கள்.

ஆனால் மூளையிலும் பல சிறிய உப மூளைகள் காணப்படுவதாகவும், இவற்றின் இரகசிய அல்லது வெளிப்படையற்ற வலையமைப்பின் ஊடாகவே வலிகள் தொடர்பான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை ஐக்கிய இராச்சியத்திலுள்ள Leeds பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது எலிகளை அடிப்படையாகக் கொண்டு இவ் ஆராய்ச்சி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments