இரண்டு விண்மீன்கள் மோதி வெடித்து சிதறிய காட்சி: அற்புத புகைப்படம் வெளியீடு

Report Print Raju Raju in விஞ்ஞானம்

இரண்டு இளம் விண்மீன்கள் ஒன்றோடு ஒன்று மோதிய அற்புத காட்சியை விஞ்ஞானிகள் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

வாயு மேகங்களுக்கு இடையிலான ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு ஒன்றோடோன்று மோதுகிற போது விண்மீன்கள் உருவாகின்றன.

விண்வெளி ஆய்வாளர்கள் தற்போது விண்மீன் வெடிப்பு சம்மந்தமாக சில ஆச்சரிய புகைப்படங்களை வெளியிட்டு அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளனர்.

இந்த வெடிப்பானது 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஓரியோ விண்மீன் தொகுதியில் நிகழ்ந்தது.

10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் சூரியனில் ஏற்பட்டது போல அதிக சக்தியை இந்த விண்மீன் மோதல் உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

விண்மீன்களின் ஆயுள் சுழற்சியில், இன்னொரு பக்கத்தில் வெடிப்பு நடைபெறுவதை விஞ்ஞானிகளின் வெளியிட்டுள்ள புகைப்படம் காட்டுகிறது.

ஈர்ப்பு விசை காரணமாகவே விண்மீன்கள் மோதி கொண்டதாக கூறும் விஞ்ஞானிகள் இதனால் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக விண்வெளியில் வாயுக்களையும், தூசிக்களையும் பரப்பியுள்ளதாக கூறியுள்ளனர்.

கடந்த 2009ம் ஆண்டு இந்த வெடிப்பின் அளவு பற்றிய குறிப்பை ஆய்வாளர்கள் முதன்முதலாக கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments