பூமியிலிருந்து நிலாவுக்கு லிப்ட் கண்டுபிடித்த தமிழன்: நாசா வியப்பு

Report Print Raju Raju in விஞ்ஞானம்

பூமியையும் நிலவையும் லிப்ட் போன்ற அமைப்பின் மூலம் இணைக்கும் திட்டத்தை கூறிய மாணவனுக்கு நாசா பரிசு வழங்கி பாராட்டியுள்ளது.

நாசா ஆராய்ச்சி நிறுவனம் மனிதர்கள் நிலாவில் வாழத்தகுதியான சாத்தியக்கூறுகளை எப்படி அமைப்பது என்ற தலைப்பில் உலகளவில் உள்ள மாணவர்களுக்கு போட்டி வைத்தது.

இதில் சாய் கிரண் என்னும் 12ஆம் வகுப்பு மாணவர் கலந்து கொண்டுள்ளார்.

சிங்கப்பூரில் வசிக்கும் சாய் கிரணுக்கு பூர்வீகம் தமிழகத்தின் சென்னை நகரம் தான்.

கடந்த 2013லிருந்தே சாய் Connecting Moon, Earth and Space மற்றும் HUMEIU Space Habitats என்னும் பெயரில் விஞ்ஞான ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.

இதன் முக்கிய அம்சமே பூமியையும், நிலவையும் லிப்ட் போன்ற அமைப்பின் மூலம் இணைப்பது தான்

இந்த ஐடியாவை அவர் நாசாவிடம் தெரிவித்துள்ளார். அவரின் இந்த செயலை பார்த்து வியந்த நாசா அவருக்கு இந்த போட்டியில் இரண்டாம் பரிசு வழங்கியுள்ளது.

இதன் முதல்கட்டமாக நிலவுக்கும், பூமிக்கும் இடையே மனித போக்குவரத்துக்கு பாதை அமைக்க வேண்டும் என கிரண் கூறுகிறார்.

ஆனாலும், இந்த விடயம் பொருளாதார ரீதியாக தற்போது சாத்தியமில்லை.

சென்ற மாதத்திலிருந்து சென்னையில் குடியேறி இந்த ஆராய்ச்சியை சாய் கிரண் தற்போது தொடர்ந்து வருகிறார்

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments