எக்ஸிமா நோயைக் குணப்படுத்த விஞ்ஞானிகள் புதிய முயற்சி!

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

எக்ஸிமா எனப்படுவது தோலின் மேற்பரப்பில் ஏற்படும் ஒரு விதமான சரும நோய் ஆகும்.

இந்நோய் தாக்கத்தினால் தோலில் காய்ந்த, வட்டவடிவிலான, தடிமனான, செதில்கள் போன்ற அமைப்புக்கள் தோன்றும்.

இதனை குணப்படுத்துவதற்கு தற்போது சில சிகிச்சை முறைகள் காணப்படுகின்றன.

எனினும் தற்போது மாற்றுமுறை ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது மனிதர்களில் காணப்படும் நன்மை பயக்கக்கூடிய நுண்ணியிர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கும் முறையாகும்.

இச் சிகிச்சை முறையானது குறித்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் தாமாகவே சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை எக்ஸிமா போன்ற தோல் நோய்களினால் அமெரிக்காவில் மட்டும் 18 மில்லியன் வரையானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வு அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments