வேற்றுக் கிரகவாசிகளை சிறைபிடித்துள்ள அமெரிக்கா..!

Report Print Mawali Analan in விஞ்ஞானம்

காலத்திற்கு ஏற்ற நவீன மாற்றம் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. இப்போதைய நவீன பாதை உலகில் மறைக்கப்பட்டு வரும் பல மர்மங்களுக்கு பதில்கள் கிடைக்கப்பெற்று கொண்டு வருகின்றது.

வேற்றுக்கிரகங்கள் தொடர்பில் பல ஆய்வுகள் புதுப்புது வடிவில் செயற்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. 2017 முதல் வேற்றுக்கிரகங்களுடன் தொடர்பு கொள்ளும் முயற்சி கூட வேகமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

என்றாலும் இந்த வேற்றுக்கிரகவாசிகளை இது வரை பூமியில் நேரில் கண்டதற்காக அடித்துக் கூறும் ஆதாரங்கள் வெளிவரவில்லை. ஆனாலும் அவர்களுடைய பறக்கும் தட்டுகளை காட்டும் ஆதாரங்கள் மட்டும் ஏகப்பட்ட அளவில் கிடைக்கத்தான் செய்கின்றது.

இவ்வாறான ஓர் நிலையில் நான் அமெரிக்கா வேற்றுக்கிரகவாசிகளை சிறைப்பிடித்துள்ளதாகவும், அவர்களை தொடர்பு கொண்டு விட்டதாகவும், அவர்களின் தொழில் நுட்பங்களை கொண்டே சர்வதேசத்திற்கு ஆட்டம் காட்டிக்கொண்டு வருகின்றது என்றும் கூறப்படுகின்றது.

கற்பனைக்கு எட்டாத தொழில்நுட்பத்தோடு மிக மிக இரகசியமான வகையில் அமைக்கப்பட்டு உள் நுழையும் அனுமதி கூட கொடுக்கப்படாத ஓர் இடமே ஏரியா 51 எனப்படும் பகுதி.

1990 வரை அமெரிக்க அரசு இந்த இடத்தை வெளி உலகுக்கு கொண்டு வரவில்லை. மிகப் பெரிய இரகசிய இராணுவத்தளமான இது மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நெவேடாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

1955 - 1960 களில் உருவாக்கப்பட்ட இந்த மர்மத் தளம் ஆரம்பத்தில் (NTC) என அழைக்கப்பட்டது. மிக மிக நவீன தொழில்நுட்ப விமானங்கள் நவீன ஆயுதங்கள் , மிக மிக நவீன வெளி உலகுக்கு தெரியாத பல கண்டுபிடிப்புகள் இங்கு காணப்படுகின்றன.

இதன் காரணமாகவே இந்த இடம் மர்மமாக காணப்படுகின்றது. இந்த தளத்திற்கு மேலே விமானங்கள் கூட பறக்கத்தடை. உள்ளே நடக்கும் விடயங்களை பணியாளர்கள் கூட வெளியில் சொல்ல முடியாது என்பது கடுமையான சட்டம்.

பறக்கும் தட்டுகள் கூட இங்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வேற்றுக்கிரகவாசிகள் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பில் பல ஆதாரங்கள் வெளிவந்தாலும் அவற்றை அமெரிக்கா மறுத்து விட்டது.

மற்றொரு வகையில் 1969இற்கு பின்னர் இது வரையில் எவருமே நிலவில் கால் பதிக்க முயலவில்லை. இப்போதைய தொழில் நுட்பத்தில் இலகுவாக நிலவுக்கு சென்று வரலாம் ஏன் அந்த முயற்சியை எவரும் எடுக்க வில்லை என்பது மர்மமே.

அதற்கான விடை ஏரியா 51 இல் அமெரிக்கா வசம் இருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது முதல் நிலவுப் பயணத்தின் போது அங்கு வேற்றுக்கிரக வாசிகளை ஆம்ஸ்ரோங் குழுவினர் அவர்கள் கண்டதாகவும், இந்த விடயம் வெளிவராமல் மறைக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் அங்கிருந்து கொண்டு வந்த ஆய்வு மாதிரிகளில் அவை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அந்த அச்சம் காரணமாகவே நிலவுக்கு மீண்டும் பயணம் செய்ய எவரும் திட்டமிடவில்லை எனவும் கூறப்படுவதோடு.,

அந்த நிலவுப் பயணத்தை பொய் என நிருவிவிடவும் கூட முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. எவ்வாறானாலும் மீண்டும் சாத்தியப்படாத நிலவுப்பயணம் இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தி விட்டது.

இதன் காரணமாகவே வேற்றுக்கிரக ஆய்வுகள் வலுப்படுத்தப்பட்டு கொண்டு வருகின்றது அதற்கான அடித்தளமே ஏரியா 51. இங்கு ஒளிக்கு நிகரான வேகத்தில் பயணிக்க ஆய்வுகள் நடைபெற்று கொண்டு வருவதாகவும் செய்திகள் உள்ளன.

இந்த மர்மத்தளம் மூலமாகவே உலகையே ஆட்டம் காணவைக்கும் தொழில் நுட்பத்தையும், ஆயுதங்களையும் அமெரிக்கா கொண்டு வருகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியோ வேற்றுக் கிரகவாசிகளின் தளமே நிலவு என்று கூறப்படுவதால் அதன் மீது மனித ஆக்ரமிப்புகள் செய்வதற்கு என்னமோ இன்றும் அச்ச நிலையே தொடருகின்றது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments