வானில் நடக்கப்போகும் அதிசயம்! மிஸ் பண்ணிடாதீங்க

Report Print Vethu Vethu in விஞ்ஞானம்

வருடத்தின் இறுதி விண்கற்கள் பொழிவினை எதிர்வரும் 21ஆம் திகதி இரவு மற்றும் 22ஆம் அதிகாலை பார்க்க முடியும் என அமெரிக்க நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அர்பீட் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த விண்கற்கள் பொழிவு மணித்தியாலத்திற்கு 5 முதல் 10க்கு இடைப்பட்ட அளவில் பூமியை நோக்கி விடும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கற்கள் பொழிவு வருடாந்தம் நிகழ்கின்ற ஒன்றாகும். அது டிசம்பர் மாதம் 17 மற்றும் 25ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலங்களில் இதற்கு முன்னர் காண முடிந்தன.

எப்படியிருப்பினும் இந்த வருடத்தில் அந்த பொழிவில் மாற்றத்தை காண முடியும் என வானியல் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை மக்களும் வருடத்தின் இறுதியில் விண்கற்கள் பொழிவினை காண முடியும்.

21 ஆம் திகதி இரவு மற்றும் 22ஆம் திகதி அதிகாலை வேலையில் வானத்தை அவதானிதால் விண்கற்களை காண முடியும் என வானியியல் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments