மர்மமான முறையில் மங்கும் ஒருவகை நட்சத்திரம் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

சர்வதேச வானியலளர்கள் அதன் பிரகாசத்தன்மை குறைவடைந்து செல்லும் ஒருவகை நட்சத்திரம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இந் நட்சத்திரம் RIK-210 என அறியப்பட்டுள்ளது.

இது கிட்டத்தட்ட புவியிலிருந்து 472 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

பொதுவாக ஒரு நட்சத்திரம் தன் பிரகாசத்தை இழக்கும் போது, அதன் ஒழுக்கில் அதன் பின்னாலுள்ள மற்றைய ஒளிரும் பொருட்களின் பிரகாச்தையும் மறைக்கிறது.

ஆனால் RIK-210 அவ்வாறான இயல்புகளை கொண்டிருக்கவில்லை. இது தற்காலத்தில் அவதானிக்கப்பட்ட வித்தியாசமான நட்சத்திரங்களில் ஒன்று என ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

உதாரணத்திற்கு, கடந்த 2015 இல் இதுபோன்ற KIC 8462852 எனும் நட்சத்திரம் கண்டறியப்பட்டது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திரம் முதலில் நாஸாவினால் அவதானிக்கப்பட்டு பின்னர் மேலதிக ஆய்வுக்கென தற்போதைய குழுவிற்கு இடமாற்றப்பட்டிருக்கிறது.

இவர்களின் தகவலின்படி மேற்படி நட்சத்திரம் 5.67 புவிநாட்களில் 15 வீத பிரகாசத்தை இழந்தவண்ணம் உள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments