விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட செயற்கை வைரம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

பொதுவாக புவியிலுள்ள கடினத்தன்மையான பொருட்கள் எனும் போது பலர் நினைவில் வருவது வைரம் தான்.

இவ் அழகான கற்கள் நம் நிச்சயதார்த்த மோதிரங்களில் உண்டு. இவை இரும்பு மற்றும் பாறைகளை வெட்டப் பயன்படக்கூடியது.

விஞ்ஞானிகள் அதன் வைரத்தன்மையை அதிகரிக்கும் முயற்சியில் பல வருடங்களாக முயன்றுகொண்டுள்ளனர்.

ஆனால் தற்போது ஆஸி விஞ்ஞானிகள் மிக அரிய வகை வைரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது ஏனையவற்றை விட கடினத்தன்மையானது என சொல்லப்படுகிறது.

பெரும்பாலான வைரங்கள் கனவுரு, காபன், பளிங்குகளாக உருவாக்கப்படுகின்றன. ஆனால் அறுகோணி வடிவிலான பளிங்குகள் அவைகளை விட 58 வீதம் வலிமையானவை.

புதிய ஆய்வொன்றின் மூலம் தற்போது விஞ்ஞானிகளால் மிக வலிமையான காபன் பளிங்குகளை ஆய்வுகூடத்தில் உருவாக்க முடிந்திருக்கிறது.

விஞ்ஞானிகள் இது பற்றி தெருவிக்கையில் இவ்வைரங்கள் வழமையான வைரங்கள் உட்பட மிக திண்மத் தன்மையான பொருட்களை வெட்டும் அளவிற்கு வலிமை கூடியது என்கின்றனர்.

இதன் அறுகோணி வடிவம் அதனை மேலும் வலிமையாக்குவதாக ஆய்வாளர் Jodie Bradby சொல்கிறார்.

இது போன்ற முயற்சிகள் முன்னரே மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை வெற்றியளித்திருக்கவில்லை. அத்தோடு இவை நம்ப முடியாத அளவிற்கு 1000 டிகிறி வெப்பநிலைகளிலேயே மேற்கொள்ளக்கூடியதாக இருந்தன.

இதற்குப் பதிலாக Bradby மற்றும் அவரது குழுவினரால் வேறு ஒரு அணுகுமுறை மூலம் இம்முறை உருவாக்க முடிந்திருக்கிறது. Diamond anvil இனைப் பயன்படுத்தி இவர்களால் வெறும் 400 டிகிறி வெப்பநிலையிலேயே இது சாத்தியமாகியுள்ளது.

மேலும் இது மற்றைய முறையிலும் வினைத்திறனானதுடன் மிகவும் செலவு குறைந்தது என சொல்லப்படுகின்றது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments