உங்களுக்கு தெரியுமா: பூவின் தேனை வண்டுகள் கண்டுபிடிப்பது எப்படி?

Report Print Printha in விஞ்ஞானம்

மலர்கள் என்றாலே கொள்ளை அழகு, அந்த மலர்களை பெண்கள் கூந்தலில் சூடிக் கொள்ளும் போது மிகவும் அற்புதமான அழகாக இருக்கும்.

இந்த மலர்களை நாம் ரசிக்க மட்டும் தான் முடியும், அதில் உள்ள சுவையான தேன்களை மனிதர்களால் எளிமையாக கண்டுபிடிக்க முடிவதில்லை.

ஆனால் அதை வண்டுகள் எளிமையாக கண்டுபிடித்து மலர்களில் உள்ள தேனை உறிஞ்சிக் கொள்ளும்.

தேன் எடுக்கும் சில வண்டுகளுக்கு மோப்ப சக்தி இருக்காது, அதே வேலையில் ஒருசில மலர்களில் மணமும் இருக்காது.

எனவே அந்த நேரங்களில் வண்டுகளின் கண்கள் மலர்களில் இருந்து தேன் எடுக்க உதவி புரிகின்றது.

மனிதனுக்கு இயற்கையில் கடவுள் கொடுத்த ஐம்புலன்களான பார்த்தல், கேட்டல், தொடுதல், முகர்தல், நுகர்தல் போன்றவை நமக்கு அளவாக அமைந்துள்ளன.

எனவே கேளா ஒலி மற்றும் புலப்படாத வண்ணங்களை உணரும் சக்தி மனிதர்களுக்கு கிடையாது.

இதனால் மனிதர்களால் மலர்களில் உள்ள தேனை கண்டுபிடிப்பது மிகவும் அரிதாக உள்ளது.

வண்டுகளின் கண்களில் அல்ட்ரா வயலட்டை உணரும் சக்தி கொண்டது.

எனவே வண்டுகள் மோப்ப சக்தியும், மலர்களின் மணமும் இல்லாமல், அதன் கண்களின் மூலமே மிகவும் அழகான மலர்களில் உள்ள சுவை மிக்க இனிமையான தேனை கண்டுபிடித்து உறிஞ்சுகின்றது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments