நீண்டகால உடற்பயிற்சியானது புரதத்தினை தூண்டி மூளைக் கலங்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
இதன் விளைவாக மூளையின் செயற்பாடு பல மடங்கு அதிகரிப்பதாக புதிய ஆய்வுத் தகவல் கூறுகின்றது.
இவ் ஆய்வில் உடற்பயிற்சியின் பின்னர் Cathepsin B எனப்படும் புரதம் எலிகளின் தசைப்பகுதியிலிருந்து மூளைக்கு இடமாற்றப்பட்டது அவதானிக்கப்பட்டது.
இப் புரதம் தசைகளால் உற்பத்தி செய்யப்படும் புரதமாகும்.
அதிகமான நேரம் எலிகள் உடற்பயிற்சி சில்லுகளில் செலவிட்ட பின்னர் அவற்றின் குருதி மற்றும் தசை இழையங்களில் குறித்த புரதம் அதிகரித்தமை அவதானிக்கப்பட்டது.
மனிதரில் தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் உடற்பயிற்சி செய்வதால் Cathepsin B மட்டம் அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
இப் புரதங்கள் மூளையின் நரம்புக்கலங்களை விருத்தி செய்து அவற்றின் தொழிற்பாட்டைக் கூட்டுகின்றன.
மேற்படி பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்ட எலிகள் அவைக்கென அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தில் பயிற்சியளிக்கப்பட்டிருந்தன.
பயிற்சியளிக்கப்பட்ட சில நாட்களிலேயே அவை தாமாக நீச்சல் தடாகத்திற்கு செல்லக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.