நபிகள் நாயகம் கூறும் பள்ளிவாசலின் சிறப்புக்கள்

Report Print Gokulan Gokulan in மதம்
40Shares

பள்ளிவாசலின் சிறப்பையும், அங்கே நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றியும் நபிகள் நாயகம் சொல்வதை கேளுங்கள்.

ஒருமுறை அவர் வானுலகம் சென்றிருந்த போது, அங்கே சிலர் பன்றிக்கறியை தின்று கொண்டிருந்தனர். “இவர்கள் யார்?” எனக்கேட்டார் நாயகம்.

அதற்கு ஜிப்ரில் (அலை), “இவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்து ஊர் வம்பு அளந்து கொண்டிருந்தவர்கள்,” என்று பதிலளித்தார். பள்ளிவாசலுக்குள் உலக விஷயங்கள் பற்றியோ அல்லது வேறு காரியங்கள் குறித்தோ பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், நாயகம் நெருப்பை மிதித்தது போன்ற உணர்வை அடைவார். பள்ளிவாசலை விட்டு வெளியேறி, பேச வேண்டியதை வெளியில் வைத்து பேசிவிட்டு, மீண்டும் பள்ளிவாசலுக்குள் நுழைவார்.

இதிலிருந்து, இறைவழிபாட்டால் நன்மைகளைச் சுமந்து செல்வதற்காக பள்ளிவாசல் வருபவர்கள், வீண் பேச்சுகளின் மூலம் பாவ மூடையை சுமந்து கொண்டு செல்கிறார்கள் என்பதை உணர வைக்கிறார்.

அது மட்டுமல்ல, ஏதாவது ஒரு செயல் கவலை தருமானால், அவர் உடனே தொழுகைக்கு சென்றுவிடுவார். ''எமது உம்மத்தவர்களில் (பின்பற்றுவோர்)

அல்லாஹ்வுக்கு பயந்தவர்கள் பள்ளிவாசல்களில் தங்கியிருப்பார்கள்.

பாங்கொலி கேட்டு தொழுகைக்கு வராதவர் அநியாயமும், வஞ்சகத்தன்மையும் உடையவர் ஆகிறார்,'' என்று பள்ளிவாசல் பற்றி அவர் குறிப்பிடுகிறார்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்