நாகதோஷம் போக்கும் நாகராஜா திருக்கோவில்

Report Print Gokulan Gokulan in மதம்

தமிழ்நாட்டின் நாகர்கோவிலில் நாகதோஷங்களை அடியோடு நீக்கும் வல்லமை பெற்ற நாகராஜா திருக்கோவில் அமைந்துள்ளது .

இங்கு அருள்பாலிக்கும் துர்க்கையம்மன் சிலை நாக தீர்த்தத்தில் கிடைக்கப் பெற்றதாக கூறப்படுகிறது. எனவே அன்னையை ‘தீர்த்த துர்க்கை’ என்று அழைக்கிறார்கள்.

துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து, நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் உடனே அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

‘ஓடவள்ளி’ என்று கொடியே இத்தல விருட்சமாகும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது.

வேணாட்டு அரசனான வீர உதய மார்த்தாண்டன், ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து விசேஷ வழிபாடுகள் நடத்தியுள்ளானாம், இந்த வழக்கம் இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது, அன்றைய தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments