360 எண்ணிக்கை ரகசியம்

Report Print Meenakshi in மதம்

"ஒரு பெண் இரக்கமன்றி ஒரு பூனையை உணவு கொடுக்காமல் கட்டிப்போட்ட பாவத்தின் காரணமாக அவள் நரகத்தில் தள்ளப்பட்டாள்,'' என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

தர்மசிந்தனையின் முக்கியத்துவம் பற்றி, அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் நெஞ்சை நெகிழவைப்பதாக உள்ளது.

எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. தனது வாழ்நாளெல்லாம் ஒருவன் தர்மம் செய்யாத கஞ்சனாக இருந்து விட்டு, மரணவேளையில் கொடைவள்ளலாக மாறுவதால் என்ன பயன் விளைந்து விடும்?

மாறாக, இவர்களைப் பார்த்து இறைவன் கோபம் அடைகின்றான். ஒருவன் பாவியாகவே இருந்தாலும், தர்மம் செய்கின்ற கொடையாளியாக இருந்தால், அவன் அல்லாஹ்வின் தோழனாவான்.

தொழுகையாளியாக இருந்துகொண்டு தர்மம் செய்யாத கஞ்சனாக இருந்தால் அல்லாஹ்வின் பாவியாவான்.

மனித உடலில் 360 எலும்புகளை ஏன் இறைவன் இணைய வைத்தான் தெரியுமா? ஒவ்வொரு இணைப்புக்கும் தினமும் தர்மம் செய்வது மனிதனுக்கு அவசியமான செயலாகும் என்பதற்காக.

நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள், "கஞ்சத்தனம் ஷைத்தானின் குணமாகும். கருணை உள்ளவன் தங்கும் இடம் சொர்க்கமாகும்.

கஞ்சத்தனம் கொண்டவன் தங்குமிடம் நரகமாகும். கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் நம்மை நாசப்படுத்தி விடும். செல்வந்தனிடத்தில் கஞ்சத்தனம் இருப்பதை அல்லாஹ் வெறுக்கின்றான்.

கஞ்சன் அல்லாஹ்வை விட்டும் தூரமாகி விட்டான். தர்மம் செய்வதன் மூலம் உங்கள் பொருட்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் நோய்களைக் குணப்படுத்துங்கள்,'' என்கிறார்கள். கஞ்சத்தனத்தை விடுத்து தர்மசிந்தனையுடன் வாழ்வோமே!

தும்முவதற்குரிய விதிமுறை

அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களுக்கு தும்மல் வந்தால், தங்களின் இரு கைகளாலோ அல்லது துணியாலோ முகத்தை மூடிக்கொண்டு சப்தத்தைக் குறைத்துக் கொள்வார்கள்.

மேலும், தும்மும் போது, ""அல்ஹம்துலில்லாஹ்' என்று கூறச்சொல்லியுள்ளார்கள்.

மேலும், ""அவர்களுடைய தோழர் அல்லது சகோதரர் யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உமக்கு நல்லருள் புரிவானாக) என்று சொன்னால், தும்மியவர் இவருக்கு "யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு' (அல்லாஹ் உமக்கு நேர்வழிகாட்டி, உமது காரியத்தை சீராக வைப்பானாக) என்று கூற வேண்டும்,'' என அவர்கள் சொல்லியுள்ளார்கள்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments