புரட்டாசி மாத விரதங்கள்

Report Print Aravinth in மதம்

புரட்டாசி (செப்டம்பர்) மாதங்களில் வரும் விரதங்களும், விரதமிருக்கும் முறைகளையும் பார்க்கலாம்.

புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பவுர்ணமி தோன்றுவது தான் இந்த மாதத்தின் சிறப்பாகும்.

இந்த மாத பவுர்ணமியில் சிவன் கோவில்களில் சிவனுக்கு கோதுமையும் வெல்லமும் கலந்த அப்பத்தால் அபிஷேகம் செய்யப்படும். இந்த மாத பவுர்ணமி அன்று தான் உமா மகேஸ்வர விரதமும் கடைபிடிக்கப்படுகிறது.

மேலும், இம்மாதத்தில் வரும் 17, 24 ஆம் திகதிகள் மற்றும் வரும் அக்டோபர் (புரட்டாசி) மாதம் 1, 8, 15 திகதிகளில் வரும் சனிக்கிழமைகள் வெங்கடேசப் பெருமானுக்கு உகந்த நாட்களாகும்.

இந்த சனிக்கிழமைகளில் விரதமிருந்து வெங்கடேசப் பெருமாளை வழிபாடு செய்து துளசி தீர்த்தம் அருந்தி, அதன் பின்னர் உணவு உட்கொள்வது சிறப்பைத் தரும்.

பின்பு, இந்த சனிக்கிழமைகளில் ஒருநாள் வெங்கடேசப் பெருமானுக்கு நிவேதனமாக புளியோதரை, பொங்கல், சர்க்கரைப் பொங்கல் முதலியவைகளை நிவேதித்து வழிபாடு செய்வது நல்லாதகும்.

மேலும், வரும் செப்டம்பர் - 30 ஆம் திகதி (வெள்ளி) மாகாளய அமாவாசை அன்று பித்ருக்களின் இறந்த திகதி தெரியாதவர்கள் இன்றையத்தினம் பிண்ட தர்ப்பணம் செய்தல் வேண்டும். இன்று ஒரு வேளை உணவுண்டு ஒரு வேளை உபவாசமிருப்பது மிகவும் சிறப்பாகும்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments