உலகமே வியக்கும் ஜம் ஜம் தண்ணீர்

Report Print Aravinth in மதம்

மனிதன் இன்னும் கண்டறியாத சான்றுகள் பல இருக்கலாம். ஆனால் மனிதன் கண்டறித்த சான்றுகளில் முதன்மையானது தான் இந்த ஜம் ஜம் கிணறு.

இப்ராஹிம் நபி அவர்கள் தனது மனைவி ஹாஜர் மற்றும் குழந்தை இஸ்மாயிலை இறைவன் கட்டளைக்கு இணங்கி மனிதர்கள் வாழாத ஒரு பாலைவனத்தில் குடியமர்த்தியுள்ளார்.

அப்போது குழந்தை இஸ்மாயில் தண்ணீர் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த வேளையில், பிஞ்சு கால்களால் நிலத்தில் அடித்து ஒரு நீருற்றை ஏற்படுத்தினார், இந்த நீரூற்று தான் ஜம் ஜம் கிணறாகும்.

இந்த கிணறு இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதனை நிரூபிக்கும் சான்றாக திகழ்கிறது.

18 அடி அகலமும், 14 அடி நீளமும் கொண்ட இந்தக் கிணற்றில் தண்ணீர் எப்போதும் சுமார் ஐந்து அடிக்கு குறையாமல் இருக்கும். இந்தக் கிணற்றில் இருந்து ஒவ்வொரு விநாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக் கொண்டே உள்ளது.

ஹஜ் காலத்திலும் ரமழான் மாதத்திலும் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கே செல்வார்கள். இங்கு வரும் அனைவருக்கும் இந்த கிணற்றின் தண்ணீர் தான் குடிநீராகும்.

மேலும், குடிதண்ணீர் என்றாலே அதை பாதுகாக்கும் விதத்தில் மருந்துகளும், குளோரின் பவுடர்களும் கலந்திருப்பார்கள் என்று நினைக்கும் நிலையில், இதுவரை ஜம்ஜம் தண்ணீரில் இது போன்ற எந்த மருந்துகளும் கலக்காமல் இருப்பது குறிப்பிடதக்கது.

மேலும், மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றது இல்லை என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது.

பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மெக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை.

தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த கிணற்றின் அருகில் இருந்து ஏரிகளோ, குளங்களோ இல்லாத நிலையில் பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் எப்படி நீரூற்று ஏற்படுகிறது என்பது இதுவரை தெரியாத ரகசியமாகும்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments