புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது தெரியுமா?

Report Print Aravinth in மதம்

புரட்டாசி பிறந்தாலே அசைவ கடைகளில் ஈயாடும். காய்கறிகள், பழங்கள் கடைகளில் கூட்டம் அலைமோதும், கூடவே அவற்றின் விலைகளும் அதிகரிக்கும்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் தான் புரட்டாசி மாதம் மழையுடன் தொடங்கியுள்ளது.

புரட்டாசி மாதத்தில் வெயில் காலம் குறைந்து மழைக்காலம் ஆரம்பிக்கும். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது.

பல மாதங்களாக சூடாகியிருந்த பூமி மழையை உறிஞ்சி சூட்டை குறைத்துக் கொள்ளும். இதனால் இந்த மாதத்தினை சூட்டை கிளப்பி விடும் காலம் என்று கூறுவார்கள்.

இந்த காலத்தில் வெயில் காலத்தைக் காட்டிலும், அதிகமாக வெயில் அடிக்கும், இந்த காலத்தில் அசைவ உணவுகள் சாப்பிடுவதால் அதிகமாக வயிற்று பிரச்சனை ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பிற்குள்ளாகும்.

இதை அப்படியே சொன்னால் நம் மக்கள் கடைபிடிக்க மாட்டார்கள் என்று தெரிந்து தான் புரட்டாசி மாதத்தில் விரதம் (அசைவம் உண்ணாமை) இருக்க வேண்டும் என ஒரு வழக்கத்தை வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments