”கௌரி விநாயகர் சதுர்த்தி” சிறப்பு பகிர்வு

Report Print Fathima Fathima in மதம்

விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் கௌரி விரதம் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கணேச பெருமானுக்கும், சுப்ரமணியருக்கும் (கார்த்திகேயர் அல்லது முருகன்) தாயாரான பார்வதி தேவியை தான் இங்கு கௌரி என்று குறிப்பிடுகிறார்கள்.

சக்திகளின் ஆதாரமாக இருக்கும் ஆதி சக்தியின் அவதாரமாக கௌரி தேவி பார்க்கப்படுவதால், பக்தியுடன் வணங்குகிறார்கள்.

இந்த விரதநாளுக்கு முந்தைய நாள், கௌரி தேவியின் சிலையை வீட்டுக்கு கொண்டு வருவார்கள், அப்போது பெண்கள் பாரம்பரிய உடைய அணிந்து கொண்டு மந்திரம் உச்சரித்து கடவுளை வணங்குவார்கள்.

பின்னர் கௌரி தேவியை குவித்து வைக்கப்பட்டிருக்கும் அரிசி அல்லது தானியங்களின் மேல் வைத்து, அழகான பூமாலைகள், பருத்து துணிகளை கொண்டு அலங்காரம் செய்வார்கள்.

'கௌரிதாரா' என்று அழைக்கப்படும் 16 முடிச்சு கொண்ட நூற்கற்றையை பெண்கள் தங்களுடைய கைகளில் கட்டிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்கள் தேவியின் அருளைப் பெற முடியும்.

விரதத்தின் ஒரு பகுதியாக ஐந்து 'பாக்கினாகள்' தயார் செய்யப்படும். (மஞ்சள், குங்குமம், கருப்பு வளையல்கள், கருப்பு மணிகள், சீப்பு, சிறிய கண்ணாடி, தேங்காய், ரவிக்கை துணி, பயறு வகைகள், தானியங்கள், கோதுமை மற்றும் வெல்லம் ஆகியவற்றைக் கொண்ட சேர்க்கை தான் பாக்கினா என்பதாகும்)

ஒரு பாக்கினாவை தேவிக்கு படையல் போட்டு விட்டு, மீதமுள்ள நான்கையும் திருமணமான பெண்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

அதன் பின்னர், போலி, பாயாசம் போன்ற இனிப்புகளை தேவிக்கு கொடுக்க வேண்டும்.

விரதம் முடிந்து அடுத்த நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும், 11-வது நாளில் விநாயகர் சிலையை தண்ணீரில் மூழ்கடித்து விட வேண்டும்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments