பிறவி தொட்டு ஊமையாயிருந்த பெண்ணைப் பேச வைத்த சமய குரவர் குருபூஜை

Report Print Akkash in மதம்
131Shares

மேலை வானவ ரும்மறி யாததோர்

கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனே

ஞால மேவிசும் பேஇவை வந்துபோம்

காலமே உனை யென்று கொல் காண்பதே என பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்களை படைத்த மாணிக்கவாசகரின் குருபூஜை தினம் நேற்று பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வினை இந்து வித்தியா விருத்திச் சபையினது அனுசரணையுடனும் ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றமும் அகில இலங்கை இந்து மாமன்றமும் இணைந்து நடத்தியுள்ளது.

இந்த நிகழ்விற்கு கல்விப் பெரும்தகைகள் , பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments