மட்டு – முறக்கொட்டான்சேனை முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாணம்

Report Print Reeron Reeron in மதம்
மட்டு – முறக்கொட்டான்சேனை முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாணம்
65Shares

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை கிராமத்தில் சிறப்பு பெற்ற முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தினை முன்னிட்டு ஏழாம் நாளாகிய இன்று இரவு அம்மனுக்கும் நடராஜாப் பெருமானுக்கும் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது.

ஆலயத்தின் மகோற்சவ பெருவிழாவானது கடந்த வியாழக்கிழமை (09) ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து காளியன் குடும்பத்தினரின் ஏழாம் திருவிழாவின் விசேட பூசை நிகழ்வாக திருக்கல்யாண நிகழ்வு முக்கியத்துவம் பெறுகின்றது.

நடைபெற்ற திருக்கல்யாண விசேட மகோற்சவ பூசை நிகழ்வில் தம்பப்பூசை, வசந்த மண்டப பூசை என்பன நடைபெற்றதும் சுவாமி உள்வீதி வருகைதந்ததும், அலங்கரிக்கப்பட்ட கல்யாண பந்தலில் வைத்து அம்பாளுக்கும் நடராஜப் பெருமானுக்கும் திருக்கல்யாண நிகழ்வு பாரம்பரிய முறையில் நடைபெற்றது.

நடைபெற்ற திருக்கல்யாண பூசை நிகழ்வினைக் காண்பதற்கு அதிகளாவான பக்தர்கள் வருகைதந்ததுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

நடைபெற்ற அனைத்து பூசை நிகழ்வுகளையும் உற்சவ கால பிரதம சிவாச்சாரியார் ஸ்ரீ சிதம்பர மகேந்திரநாத சிவாச்சாரியர் தலைமையில் நடைபெற்றது.

ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது பன்னிரெண்டு நாள் உற்சவத்துடன் எதிர்வரும் 20ம் திகதி இரவு தீ மிதிப்பு இடம்பெற்றதும் களுவன்கேணி இந்துமா சமுத்திரத்தில் தீர்த்த உற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments