முறக்கொட்டாஞ்சேனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பால்குட பவனி மற்றும் வேட்டைத் திருவிழா

Report Print Navoj in மதம்
முறக்கொட்டாஞ்சேனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பால்குட பவனி மற்றும் வேட்டைத் திருவிழா
58Shares

மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் பால்குட பவனி மற்றும் வேட்டைத் திருவிழா என்பன இன்று (16) இடம்பெற்றுள்ளது.

கடந்த 9ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய உற்சவத்தின் 08ம் நாள் பால்குட பவனி மற்றும் வேட்டைத் திருவிழா இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை தீ மிதிப்பு மற்றும் தீர்த்தமாடுதல் என்பவற்றுடன் மஹோற்சவம் நிறைவுபெறவுள்ளது.

இந்த பால்குட பவனியானது தேவாபுரம் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி தேவபுரம் சேர்மன் வீதி, முறக்கொட்டாஞ்சேனை பிரதான வீதியாக சென்று ஆலயத்தை சென்றடைந்தது.

இதில் ஐநூறுக்கு மேற்பட்ட சிறுவர் முதல் பெரியோர்கள் வரை கலந்து கொண்டு தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் பொருட்டு தலைமையில் பால்குடமேந்தி கலந்து கொண்டுள்ளனர்.

அம்பாளுக்கு அபிஷேக பூசை, கொடிதம்ப பூசை, வசந்த மண்டப பூசை என்பன இடம்பெற்று மாலை வேட்டைத் திருவிழா ஆலயத்தில் இருந்து புறப்பட்டு தேவாபுரம் பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலில் நடைபெற்றுள்ளது.

இவ் உற்சவகால பூசைகள் யாவும் யாழ்ப்பாணம் வேதாகம பூசணம், ஆகம கிரியா ஜோதி சிவஸ்ரீ.சிதம்பர மகேந்திரநாத சிவாச்சாரியார் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments