மட்டக்களப்பு வீரம்மாகாளியம்மன் ஆலய வருடாந்த பால் குடபவனி

Report Print Kari in மதம்
மட்டக்களப்பு வீரம்மாகாளியம்மன் ஆலய வருடாந்த பால் குடபவனி

மட்டக்களப்பு - கொக்குவில் ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பால்குட பவனி இடம்பெற்றுள்ளது.

இந்த பால்குடபவனி மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து இன்று ஆரம்பமாகி உள்ளது.

மட்டக்களப்பு திருமலை வீதி ஊடாக ஊறணி, பிள்ளையாரடி ஊடாக கொக்குவில் ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தை பால்குட பவனி சென்றடைந்துள்ளது.

ஆலய வழிபாட்டு மரபு சிறப்பாகப் பேணப்பட்டு வரும் மட்டக்களப்பில் இவ்வாறான பால்குடங்களை பெண்கள் சுமந்து சென்று இறைவனைக் குளிர்விப்பதற்காக பாலாபிசேகம் நடைபெறுவது வழங்கமாகும்.

இன்றைய பால்குட பவனியில் பல நூற்றுக் கணக்கான பெண்கள் பங்கு கொண்டதுடன், நடன, நாட்டிய கலைஞர்களின் வரவேற்பு நடனங்களுடன் பால்குட பவனி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments