ஈழப்புரட்சி அமைப்பின் ஈழ தேசிய போராளிகள் தினம் அனுஸ்டிப்பு

Report Print Theesan in மதம்

ஈழப்புரட்சி அமைப்பின் ஈழ தேசிய போராளிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

ஈழப்புரட்சி அமைப்பின் தலைவர் துஸ்யந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த இந்நிகழ்வானது வவுனியா, குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள மரணித்த போராளிகளின் நினைவிடத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன் போது போராளியின் தயாரினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதோடு மரணித்த போராளிகளின் திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அத்துடன் ஈழ தேசிய போராளிகள் தினத்தினை ஒட்டி இடம்பெற்ற உதைப்பந்தாட்டம் மற்றும் வலைப்பந்தாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளிற்கான பரிசில்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், ஈழப்புரட்சி அமைப்பின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்