உகந்தமலையில் கோலாகலமாக இடம்பெற்ற கொடியேற்றம்

Report Print V.T.Sahadevarajah in மதம்

வரலாற்று பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழாவிற்கான கொடியேற்றம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஆலயத்தலைவர் சுதுநிலமே திசாநாயக்க கொடியை தாங்கிவாறு, ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.க.கு.சீதாராம் குருக்கள் கொடியேற்றத்தை மிகச்சிறப்பாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

வழமைக்குமாறாக கிழக்கு மாகாணத்தின் சகல பாகங்களிலுமிருந்தும் சுமார் 5000 அடியார்கள் ஆலய வளாகத்தில் ஒன்றுகூடியிருந்தனர்.

சிங்கள பௌத்தமக்களும் கலந்துகொண்டிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரனும் சமூகமளித்திருந்தார்.

கொடியேற்றத்தன்று கதிர்காமத்திற்கான பாதயாத்திரையிலீடுபடும் 4500 யாத்திரீகர்களும் இக்கொடியேற்றத்தின் பிறகு கண்டு காட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்