கல்முனையில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் விழா

Report Print V.T.Sahadevarajah in மதம்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் தைப்பொங்கல் விழா இன்று பிரதேச செயலாளர் ஜே.அதிசயராஜ் தலைமையில் கோலாகமாக நடைபெற்றுள்ளது.

கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து தைப்பொங்கல் பவனி அம்பாறை அரசாங்க அதிபர் ஜே.திசாநாயக்காவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் மேலதிக அரசாங்க அதிபர் க.விமலநாதன் திறைசேரியின் முகாமைத்துவ சேவை பிரதிப்பணிப்பாளர் எம்.கோபால ரத்தினம் மற்றும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் அகியோர் தலைப்பாகை அணிவிக்கப்பட்டு பவனியாக அழைத்து வரப்பட்டனர்.

கலாச்சார பாரம்பரியங்களுடன் கூடிய பொங்கல் பவனி பிரதேச செயலகத்தை அடைந்ததும் அங்கு தேசியக்கொடி, நந்திக்கொடி ஏற்றப்பட்டு நிகழ்சிகள் ஆரம்பமாகியுள்ளன.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers