ஆடி அமாவாசை விரதம்: பிதிர்களுக்கு தர்ப்பணம் செலுத்தும் மக்கள்

Report Print Akkash in மதம்

ஆடி அமாவாசை தினமான இன்று இலங்கையின் பல்வேறு இடங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

நம் முன்னோர்களுக்கு வருடாந்த சிராத்தம் செய்வதுடன், ஒவ்வொரு அமாவாசையன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

தை, ஆடி, புரட்டாசி ஆகிய மூன்று நாட்களில் அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு எள், தண்ணீர், மாவு போன்றவற்றை படைத்து தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு.

ஆடி அமாவாசை விரதம் நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் என்றாலும், இறந்த தந்தைக்காக பிள்ளைகள் அனுஷ்டிக்கும் விரதம் என்று கூறுவார்கள்.

அன்றைய தினம் வீட்டில், மூதாதையர்கள் படத்துக்கு மாலை போட்டு அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை தலை வாழை இலையில் படைத்து அவர்களை வணங்க வேண்டும்.

முதலில் காகத்திற்கு உணவிட்டு பின்பு விரதம் முடிக்க கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

அந்த வகையில் இன்று கொழும்பு முகத்துவாரம் கடலில் மக்கள் தமது முன்னோர்களுக்கு பிதிர்க்கடன் செலுத்துவதை காணக்கூடியதாக இருந்தது.

மேலும், இந்துக்கலாச்சார மீள்குடியேற்ற அமைச்சினால் வெள்ளவத்தை கடற்கரையிலும் ஆடிஅமாவாசை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers