ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் மஹா சிவராத்திரி விழா

Report Print Kamel Kamel in மதம்

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் நேற்றைய தினம் வெகு சிறப்பாக மஹா சிவராத்திரி விழா நடைபெற்றது.

மாணிக்கப்பிள்ளையார் ஆலய அறநெறிப் பாடசாலை, ஆஞ்சனேயர் ஆலய அறநெறிப்பாடசாலை மற்றும் ஆலய பரிபாலணசபையினர் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

அறநெறிப் பாடசாலை மாணவ மாணவியரும் ஏனைய பாடசாலை மாணவியரும் பல்வேறு கலை நிகழ்வுகளை மேடையில் அரங்கேற்றியிருந்தனர்.

பூஜை வழிபாடுகளும், கலை நிகழ்வுகளும் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இதேவேளை, கலை நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு பெறுமதி மிக்க பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்