இலங்கை பெண்ணிடம் மனதை பறிகொடுத்த இளைஞர்... பின்னர் என்ன ஆனது தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in உறவுமுறை

இந்தியாவை சேர்ந்த இளைஞர் இலங்கை பெண்ணுடன் டுவிட்டர் மூலம் நட்பாகி காதலித்து திருமணம் செய்த நிலையில் அந்த அழகான நினைவுகளை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

இந்தியாவின் மத்திய மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கோவிந்த் பிரகாஷ் (26). இவர் கடந்த 2015-ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்ட ஒரு டுவீட்டை லைக் செய்தார்.

அதே டுவீட்டை இலங்கையை சேர்ந்த ஹன்சினி எதிர்சின்கே (25) என்ற இளம்பெண்ணும் லைக் செய்தார்.

பின்னர் ஹன்சினியின் டுவிட்டர் பக்கத்தில் சென்று அவருடன் முதலில் நட்பாக பேசினார் கோவிந்த். பின்னர் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி அது காதலாக மாறியது.

இரண்டு ஆண்டுகள் கழித்து 2017ல் ஹன்சினி இந்தியாவுக்கு வந்த நிலையில் முதல்முறையாக கோவிந்தை சந்தித்தார்.

இதையடுத்து இந்தியாவில் தங்கி முதுகலை பட்டப்படிப்பை படித்த ஹன்சினி தனது பெற்றோரிடம் தனது காதல் குறித்து பேசினார்.

இந்நிலையில் காதலுக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த பிபரவரி மாதம் 10-ஆம் திகதி மத்திய பிரதேசத்தில் பிரகாஷ் - ஹன்சினி திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதி தற்போது மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றனர்.

டுவிட்டர் மூலம் ஹன்சினி தனது மனைவியாக கிடைத்ததை மற்றவர்களுக்கு கூறும் வகையில் கோவிந்த் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை அடிக்கடி வெளியிட்டு வருவதோடு, டுவிட்டரில் லைக் செய்த ஒரு டுவிட்டால் தங்கள் காதல் கதை தொடங்கியதாக பதிவிட்டு வருகிறார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்