28 ஆண்டு காதல் வாழ்க்கை.. தேவதைக் கதைகளை இப்போது நம்புகிறேன்! ஷாருக் கான்

Report Print Kabilan in உறவுமுறை

இன்று திருமண நாளைக் கொண்டாடும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தனது மனைவிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரைப்பட உலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ஷாருக்கான், திரைப்படத்தில் அறிமுகமாவதற்கு முன்பே காதல் திருமணம் செய்தவர். தனது மனைவி கௌரியை 6 ஆண்டுகளாக காதலித்துக் கொண்டிருந்த காலத்தில் தான், ஷாருக்கான் சின்னத்திரையில் அறிமுகமானார்.

1991யில் இவர்களின் திருமணம் நடந்த பின்னர் தான், ஷாருக்கின் முதல் படமான ‘தீவானா’ வெளியானது. படம் வெற்றியடைந்ததும் காதல் நாயகனாக வலம் வரத் தொடங்கினார் ஷாருக். இந்நிலையில், ஷாருக்-கௌரி ஜோடி இன்றைய தினம் தங்களது 28வது திருமண நாளை கொண்டாடுகிறது. இதற்காக தனது மனைவிக்கு ட்விட்டரில் ஷாருக்கான் திருமண வாழ்த்து கூறியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘எனக்கென்னவோ, நம் திருமணம் நேற்று நடந்ததுபோலத் தான் இருக்கிறது. அதற்குள் நம் உறவுக்குக் கிட்டத்தட்ட 30 வயதாகப் போகிறது. நமக்கு மூன்று அருமையான குழந்தைகள் இருக்கிறார்கள். நானும் எத்தனையோ தேவதைக் கதைகளைக் கூறியிருக்கிறேன்.

அந்தக் கதைகளை நான் இப்போது நம்புகிறேன். ஏனென்றால், அப்படியொரு அழகான வாழ்க்கை எனக்கும் அமைந்திருக்கிறது’ என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு திருமண வாழ்த்து கூறி வருகின்றனர்.

இதற்கிடையில், ஷாருக்கின் காதல் மனைவி கௌரி, தனது கணவர் குறித்து கூறுகையில், ‘ஷாருக் நல்ல கணவர், நல்ல அப்பா. அவர் குடும்பத்துக்காக யோசிப்பவர். என் business-யில் எனக்கு உதவி செய்பவர். எல்லா மனிதர்களையும் போல அவரிடமும் சில குறைகள் இருந்தாலும், அவருடைய மனைவியாக அவரைப்பற்றி நல்ல விடயங்களை மட்டுமே நான் வெளியில் கூறுவேன். No negative about Shahrukh’ என தெரிவித்துள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்