தனது உண்மையான தந்தை யார் என்றே அறியாத பிரபலங்களை தெரியுமா? வெளியான புகைப்படங்கள்

Report Print Raju Raju in உறவுமுறை

தந்தை இல்லாமல் பல பிள்ளைகள் இவ்வுலகில் வளர தான் செய்கிறார்கள்.

அதே சமயம் ஒற்றை ஆளாக அம்மாவால் மட்டுமே வளர்க்கப்பட்டு கடைசி வரை அப்பா யார் என்று அறியாமல் இருப்பது மிகவும் கொடுமையான விடயம்.

இப்படியான நிலையில் பிறந்து, வளர்ந்து பின்னாட்களில் பல துறைகளில் உலகளவில் பெரும் பிரபலமாக சிலர் உருவெடுத்துள்ளனர்.

மர்லின் மன்றோ

கவர்ச்சி நாயகி என்று பெயர் பெற்ற மர்லின் மன்றோ தனது இளம் வயதில் மிகவும் சிரமப்பட்டவர். தனது பதின் வயதில் திருமணமாகி விவாகரத்திற்கு பிறகே இவர் சினிமாவல் காலூன்றினார்.

இவருக்கு, தனது உண்மையான தந்தை யார் என்று தெரியாது. மார்டின் எட்டி மோர்ட்டன்சென் என்பவர் தான் இவரது பயாலஜிக்கல் தந்தை என்று அறியப்படுகிறார்.

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது ஆப்பிள் மற்றும் கடின உழைப்பும் தான். ஸ்டீவ் ஜாப்ஸ் சிறு குழந்தையாக இருக்கும் போதே தத்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு தன்னை வளர்த்த பெற்றோர் யார் என்று தான் தெரியுமே தவிர, தனது உண்மையான அப்பா யார் என்று கடைசி வரை தெரியாமலே போனது.

அட்ரியன் கிரெனியர்

அட்ரியன் கிரெனியர் ஒரு அமெரிக்க நடிகர். இவர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். வளரும் போது 18 ஆண்டுகள் தனது தந்தை யாரென்றே தெரியாமல் அப்பாவை பிரிந்து வாழ்ந்து வந்தார் அட்ரியன் கிரெனியர்.

லிவ் டைலர்

லிவ் டைலர் அமெரிக்கவை சேர்ந்த நடிகை மற்றும் மொடல் அழகி ஆவர். லிவ் டைலரின் பிறப்பு சான்றிதழில் டாட் ரன்ட்ரென் என்பவரே இவரது தந்தை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், பத்து வருடம் கழித்தே, ஏரோ ஸ்மித் எனும் பிரபல பாடகர் குழுவில் இருந்து டைலர் பெகன் என்பவரே தனது நிஜமான அப்பா என்று தெரிந்துக் கொண்டார் லிவ் டைலர்.

ஜெஃப் பெஸோஸ்

இவர் தான் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி. உலகின் மாபெரும் ஓன்லைன் இ-காமர்ஸ் இணையத்தின் உரிமையாளரான இவர் தனது உண்மையான அப்பாவை கண்டதே இல்லை.

டேவ் தாமஸ்

டேவ் தாமஸ் ஒரு புரோகிராமர். புத்தகங்களும் எழுதியுள்ளார். இவர் 1994ல் பிரித்தானியாவில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸ் டல்லாஸ் இடத்திற்கு இடம் பெயர்ந்தார். இவர் சிறு குழந்தையாக இருக்கும் போதே, தத்தெடுத்து சென்றுவிட்டனர். டேவ் தனது உண்மையான அப்பா, அம்மாவை கண்டதே இல்லை.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்