துரோகம் செய்த பிரபல நடிகர்களை மன்னித்து ஏற்று கொண்ட மனைவிகள்! புகைப்படங்கள் இதோ

Report Print Raju Raju in உறவுமுறை

மனைவியை ஏமாற்றி துரோகம் செய்த கணவன் என்ற செய்தி அடிக்கடி வருவதை பார்த்திருப்போம்.

இது போன்ற சூழல்களை நட்சத்திர தம்பதிகளும் தாண்டி வந்துள்ளனர். இதனால் விவாகரத்து பெற்ற தம்பதிகளும் இருக்கிறார்கள்.

அதே சமயம் கணவனை மன்னித்து ஏற்று கொண்டவர்களும் உள்ளனர்.

அப்படி துரோகம் செய்த கணவனை மன்னித்து ஏற்றுக் கொண்ட நட்சத்திரங்களின் மனைவியர் குறித்து காண்போம்

நடிகர் ஆதித்யா பஞ்சோலி

பிரபல பாலிவுட் நடிகர் ஆதித்யா மனைவி ஸரீனா வஹாபை ஏமாற்றி பல பெண்களுடன் உறவில் இருந்ததாக அவரே கூறியுள்ளார்.

அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

முக்கியமாக பிரபல நடிகை கங்கனாவுக்கு இவர் நிறைய பணவுதவி செய்ததாகவும், ஒருமுறை கங்கனா இவர் மீது தொல்லை செய்ததாக கூறி வழக்கு தொடர்ந்தார் என்றும் பல செய்திகள் வெளியாகின.

ஆனால், அனைத்தையும் தாண்டி, ஸரீனா வஹாப், ஆதித்யாவை மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

அமிதாப்பச்சன்

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவர் மனைவி ஜெயாபச்சன் ஆகியோர் சிறந்த காதலுக்கு உதாரணமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் அமிதாப்பச்சனே தனது மனைவி ஜெயாவை ஏமாற்றி ரேகாவுடன் உறவில் இருந்தார் என பல ஊடகங்களில் அந்நாட்களில் செய்திகளாக வெளியாகின.

அமிதாப்பச்சன் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளுக்கு எல்லாம் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது என கூறினார்.

ஜெயா கூறுகையில், நான் என் கணவரை நம்புகிறேன். நான் அவரது செயலில் ஒருபோதும் அச்சத்தையோ, நம்பிக்கையின்மையோ உணர்ந்தது இல்லை என கூறினார்.

கோவிந்தா

ஒரு காலத்தில் நடிகர் கோவிந்தா மற்றும் ராணி முகர்ஜி ஆகியோர் திரையில் சிறந்த ஜோடியாக வலம் வந்தனர்.

அப்போது அவர்கள் இருவருக்கும் மத்தியில் காதல் இருப்பதாக கிசுகிசு பரவியது.

ஒரு முறை ஒரு செய்தி நிபுணர் வெளிப்படையாக தானே, கோவிந்தாவை ராணி இல்லத்தில் இரவு உடையில் நேரே கண்டுள்ளேன் என கூறினார். ஆனால், அதை ராணியின் பெற்றோர் முற்றிலுமாக மறுத்துவிட்டனர்.

அக்‌ஷய்குமார்

அக்‌ஷய்குமார் ட்விங்கிள் கண்ணாவுடன் காதலில் இருந்தே அதே சமயத்தில், ஷில்பா ஷெட்டியையும் காதலித்து வந்தார் என தகவல்கள் பரவின.

அக்‌ஷய்குமார் தன்னை ஏமாற்றுகிறார் என அறிந்தே ஷில்பா அவரை பிரிந்தார் என கூறப்பட்டது.

இதை அனைத்தையும் அறிந்தும், ட்விங்கிள் அக்‌ஷய்குமாரை காதலுடன், முழு மனதுடன் அப்படியே ஏற்றுக் கொண்டார்.

ஷாருக்கான்

ஷாருக்கான் குறித்த புரளி பாலிவுட்டில் பிரபலம், ஆனால் தமிழில் பலருக்கும் தெரியாது.

டான் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது ஷாருக்கான் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவரும் திருமணம் செய்துக் கொண்டார்கள் என கூறப்பட்டது.

ஒருமுறை ஷாருக்கான் அலுவலகத்தில் இருந்து நள்ளிரவு மூன்று மணியளவில் பிரியங்கா சோப்ரா வெளியேறினார் என்றும் செய்திகள் வெளியாகின.

ஆனால், ஷாருக்கான் மீது மனைவி கெளரி கான் எள்ளளவும் சந்தேகப்படவில்லை. அவரை முழுமையாக காதலுடன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...