திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமான பிரபல நடிகைகளை தெரியுமா? புகைப்படங்களுடன்

Report Print Raju Raju in உறவுமுறை

சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் திருமணம் செய்து கொள்வதும், பின்னர் விவாகரத்து செய்வதும் அதிகளவில் நடக்கும் ஒன்று தான்.

அதே நேரத்தில் திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமாகி அதற்கு காரணமான காதலரையே பல நடிகைகள் மணந்து கொண்டுள்ளனர்.

அப்படி திருமணத்துக்கு முன்னர் கர்ப்பமான நடிகைகள்,

கொன்கொனா சென் சர்மா

பிரபல இந்தி நடிகையான சென் சர்மா தன்னுடன் நடித்த சக நடிகர் ரன்வீர் ஷோரேவை காதலித்து வந்தார். இருவருக்கும் கடந்த 2010-ல் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமான சர்மா பின்னர் ஆண் குழந்தையை 2011-ஆம் ஆண்டு தொடக்கத்தில் பெற்றெடுத்தார்.

ஸ்ரீதேவி

தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி முதலில் மிதுன் என்ற நடிகரை மணந்து பின்னர் விவாகரத்து செய்தார்.

இதையடுத்து பிரபல தயாரிப்பாளர் போனி கபூருடன் டேட்டிங் சென்றார். இதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதாக தைரியமாக அறிவித்த ஸ்ரீதேவி, போனி கபூரை திருமணம் செய்த பின்னர் குழந்தை பெற்றார்.

சரிகா

நடிகர் கமல்ஹாசனும், நடிகை சரிகாவும் காதலித்து வந்த நிலையில் சரிகா கர்ப்பமாகி மகளை பெற்றெடுத்தார்.

அவர் தான் தற்போதைய பிரபல நடிகை சுருதிஹாசன். இதன் பின்னர் கமலும், சரிகாவும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டாவது மகளான அக்‌ஷராஹாசன் பிறந்தார்.

அம்ரிதா அரோரா

முன்னணி நடிகையான அம்ரிதா, தொழிலதிபர் சகீல் லடக் என்பவரை காதலித்தார். இதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த அம்ரிதா அதன் பின்னரே சகீலை மணந்தார்.

டுவிங்கிள் கண்ணா

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய்குமார், பிரபல நடிகை டுவிங்கிள் கண்ணாவை கடந்த 2002-ஆம் ஆண்டு மணந்தார்.

ஆனால் திருமணத்துக்கு முன்னரே டுவிங்கிள் கர்ப்பமாக இருந்தார் என அப்போதே கிசுகிசுக்கப்பட்டது.

மஹிமா சவுத்ரி

முன்னணி நடிகை மஹிமா தனது காதலர் பாபி முகர்ஜியை கடந்த 2006-ல் திருமணம் செய்து கொண்டார். காதலிக்கும் போதே மஹிமா கர்ப்பமானதால் அவசரமாக தனது திருமண அறிவிப்பை வெளியிட்டு பாபியை மணந்தார்.

நீனா குப்தா

இந்தி திரைப்பட நடிகையான நீனா வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவனுடன் டேட்டிங் சென்ற நிலையில் கர்ப்பமானார்.

அவருக்கு மசாபா என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆனால் ரிச்சர்ட்ஸ் தனது முதல் மனைவியுடனே வாழ விரும்பியதால் இருவரும் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஜெசிகா அல்பா

அமெரிக்க நடிகையான ஜெசிகா பிரபல தயாரிப்பாளர் கேஷ் வேரனை கடந்த 2009-ஆம் ஆண்டு மே மாதம் மணந்தார்.

ஆனால் அடுத்த மாதமே அவருக்கு குழந்தை பிறந்தது. இதன் மூலம் திருமணத்துக்கு முன்னரே ஜெசிகா கர்ப்பமாக இருந்தது உறுதியானது.

ஜெனிபர் கார்னர்

புகழ்பெற்ற அமெரிக்க நடிகையான ஜெனிபர் கடந்த 2005 யூன் மாதம் பென் அப்லக் என்பவரை மணந்தார். ஜெனிபர் ஏற்கனவே கர்ப்பமாக இருந்த நிலையில் திருமணமான ஆறு மாதத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்