சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்ணை மணந்த முகேஷ் அம்பானி... தனது மனைவிக்காக செய்த அழகான காதல் தெரியுமா?

Report Print Raju Raju in உறவுமுறை

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் காதல் கதை மிக அழகானது.

முகேஷ் அம்பானி நீட்டாவை கடந்த 1985ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். முகேஷ் போன்று நீட்டா கோடீஸ்வரி கிடையாது, அவர் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண் தான்.

முகேஷ் அம்பானியும் காதல் திருமணம் செய்து கொண்டவர் தான். சாதாரண வீட்டில் பிறந்த நீட்டா மிகச்சிறந்த நாட்டியக் கலைஞர்.

மும்பையில் ஒரு நவராத்திரி விழாவின்போது நீட்டாவின் நடனத்தைக் கண்டு பிரமித்துப் போனார் முகேஷின் தந்தை திருபாய் அம்பானி.

தன் மூத்த மகனுக்குப் பொருத்தமாக இருப்பார் என்று நீட்டா குறித்து மனதுக்குள் எண்ணிக்கொண்டார்.

நீடாவை அழைத்த திருபாய், நாளை என்னை அலுவலகத்தில் வந்து சந்திக்க முடியுமா என்றார்.

எவ்வளவு பெரிய ஆள், நம்மை அலுவலகத்துக்குக் கூப்பிடுகிறாரே என்று பயந்து போனார் நீட்டா. எனினும், அடுத்த நாள் திருபாயை அலுவலகத்தில் சென்று சந்தித்தார்.

முதலில், நீட்டாவின் பொழுதுபோக்கு, அவருக்குப் பிடித்த விடயங்கள் குறித்து கேட்டறிந்து கொண்ட திருபாய் அம்பானி பின்னர், என் மூத்த மகன் குறித்து உங்களுடன் பேச வேண்டும். அவனை சந்திக்க உங்களுக்கு விருப்பமா என்று கேட்டார்.

உடனடியாக நீட்டா அதிலென்ன இருக்கிறது என்று முகேஷை அவரின் வீட்டில் போய் சந்தித்தார்.

தொடர்ந்து பலமுறை சந்திப்பு நடந்தது. ஒரு முறை நிடாவை காரில் அழைத்துச் சென்ற முகேஷ், மும்பையில் டிராபிக் நிறைந்த சிக்னலில் வண்டியை நிறுத்திவிட்டு, தன் காதலைச் சொன்னார். நீட்டா எதுவும் சொல்லாமல் மௌனம் காக்கவே, பதில் சொன்னால்தான் வண்டியை எடுப்பேன் என்று மௌனராகம் கார்த்திக் போல அடம் பிடித்தார்.

பின்னர் நீட்டா முகேஷின் காதலை ஏற்று கொள்ள இருவரின் திருமணமும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers