திருமணமான குறுகிய காலத்தில் விவாகரத்து செய்த இந்த தமிழ் நடிகர், நடிகைகளை பற்றி தெரியுமா? வெளியான புகைப்படங்கள்

Report Print Raju Raju in உறவுமுறை

திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர், நடிகைகள் திருமணமான குறுகிய காலத்திலேயே தங்களது துணையை விவாகரத்து செய்துள்ளனர்.

ராதிகா - பிரதாப் போத்தன்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராதிகா கடந்த 1978-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார்.

இவர் 1985-ஆம் ஆண்டு பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தனை மணந்தார். ஆனால் அடுத்த ஆண்டே (1986) பிரதாப்பை ராதிகா விவாகரத்து செய்துவிட்டார்.

பிரசாந்த் - கிரஹலட்சுமி

டாப் ஸ்டார் பிரசாந்த், கிரஹலட்சுமி என்ற பெண்ணை 2005-ல் திருமணம் செய்தார். ஆனால் கிரஹலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமானதை தன்னிடம் மறைத்துவிட்டார் என குற்றஞ்சாட்டிய பிரசாந்த் 2007-லேயே மனைவியிடம் விவாகரத்து கோரினார்.

ராஜ்கிரண் - செல்லம்மா

குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு பெயர் போனவரான நடிகர் ராஜ்கிரண் செல்லம்மா என்ற பெண்ணை மணந்த நிலையில் குறுகிய காலத்திலேயே அவரை பிரிந்தார்.

பின்னர் நடிகை பத்ம ஜோதியை ராஜ்கிரண் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

சரத்பாபு - ரமா பிரபா

தமிழில் முன்னணி நடிகராக இருந்த சரத்பாபு கடந்த 1981-ல் ரமா பிரபா என்ற பெண்ணை மணந்தார். ஆனால் தம்பதியின் திருமண வாழ்க்கையில் விரைவில் கசப்பு ஏற்பட ஆறு ஆண்டுகளிலேயே மனைவியை சரத்பாபு பிரிந்துவிட்டார்.

சரிதா - வெங்கட சுப்பையா

1970-80களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கிய சரிதா 1975-ல் வெங்கட சுப்பையா என்பவரை திருமணம் செய்த நிலையில் ஒரு ஆண்டிலேயே அவரை விவாகரத்து செய்து விட்டார்.

சுவர்ணமால்யா - அர்ஜூன்

நடிகை, தொகுப்பாளினி என பன்முகத்தன்மை கொண்ட சுவர்ணமால்யா கடந்த 2002-ல் அர்ஜூன் என்பவரை மணந்து அமெரிக்கா சென்றார்.

ஆனால் திருமணமான ஒரே ஆண்டில் இந்தியாவுக்கு தனியாக சினிமாவில் நடிக்க அவர் திரும்பினார். இதுவே கணவரை பிரிய காரணமாகி விட்டதாக கூறப்பட்டது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers