கர்ப்பிணியாக இருக்கும் எமி ஜாக்சனுக்கு லண்டன் காதலருடன் நிச்சயதார்த்தம்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

நடிகை எமி ஜாக்சனுக்கு அவரது லண்டன் காதலருடன் இன்று நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் கலக்கிய நடிகை எமி ஜாக்சன் லண்டனை சேர்ந்த கோடீஸ்வரர் ஜார்ஜை காதலித்து வருகிறார்.

மேலும், திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், குழந்தை பிறந்த பின்னர்தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தெரிவித்திருந்த அவருக்கு இன்று தனது காதலுருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது,

மறக்க முடியாத எங்களின் நிச்சயதார்த்த நாள். எங்களின் அற்புதமான நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் நன்றி எனக் குறிப்பிட்டு நிச்சயதார்த்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers