நடிகர் ஆர்யா - சாயிஷா திருமணம் நாளை ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கிறது.
திருமணத்தை முன்னிட்டு சங்கீத் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட்டின் பிரபல நடிகர் திலீப் குமாரின் பேத்தி சாயிஷா என்பதால் இந்த திருமணத்திற்கு பாலிவுட் நட்சத்திரங்களும் வருகை தரவுள்ளனர்.
இவர்கள் திருமணம் நடக்கவிருக்கின்ற நிலையில், நெட்டிசன்கள் இவர்களது வயது வித்தியாசத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.
சாயிஷாவின் வயது 21. ஆர்யாவின் வயது 38 ஆகும். இவர்கள் இருவருக்குள்ளும் 17 வயது வித்தியாசம் என்பதால் நெட்டிசன்கள் ஆர்யாவுடன் சிறுமி ஒருவர் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.
ஆர்யா ஒரு சிறுமியின் அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 10 வருட சேலன்ச் என கிண்டல் செய்துள்ளனர், இந்த தம்பதியினருடன் சேர்ந்து மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஜோடியையும் ட்ரோல் செய்துள்ளனர்.
அவர்கள் இருவருக்குமான வயது வித்தியாசம் 13 வருடங்கள் ஆகும்.