என் கணவரின் வாழ்க்கையில் விளையாடிய ஒரு நபர்....யாரும் வரவில்லை: நடிகர் கஞ்சா கருப்புவின் மனைவி

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

தமிழ் திரையுலகின் காமெடி நடிகரான கஞ்சா கருப்புவின் மனைவி, தனது வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய சோகம் குறித்து பகிர்ந்துள்ளார்.

5 ஆம் வகுப்பு வரை படித்திருக்கும் கஞ்சா கருப்பு, தனது ஊரில் மற்ற பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பள்ளியை கட்டிக்கொடுத்தார்.

அவருக்கு டாக்டர் பெண் தான் வேணும் என்பது ஆசை, ஏனெனில் அவருடைய அப்பா உடல்நிலை சரியில்லாமல், மருத்துவர் கவனிப்பு இல்லாமல் இருந்ததால் அப்படி ஒரு முடிவு எடுத்திருந்தார்.

இப்படித்தான் எங்கள் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து நல்லபடியாக சென்றுகொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் ஒரு நபர் மூலம் புயல் வீச ஆரம்பித்தது.

படம் தயாரித்தார். படம் பண்ண தெரியாத ஒருத்தரை வைத்து படம் தயாரித்து நஷ்டத்தில் விழுந்தார். அதிலிருந்து மீண்டு வருவதற்கே சில காலம் தேவைப்பட்டது.

இடையில சில வருடம் அவருக்கு நல்ல ரோல் கிடைக்கல. அதனால, வந்து விசாரிக்கக்கூட ஆட்கள். இப்போ நடிக்கக்கேட்டு வர ஆரம்பிச்சுட்டாங்க. நிம்மதியாக இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers