19 வயதில் தனது வருங்கால மனைவி மீது காதல் கொண்ட இலங்கை பிரபலம்: சுவாரசிய காதல் கதை

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னால் அணித்தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான ஏஞ்சலோ மேத்யூஸ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

தொழில் வேறு தனது குடும்ப வாழ்க்கை வேறு, இரண்டிற்குமே சக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் மேத்யூஸ் கவனமாக இருப்பார்.

2004 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக விளையாடியபோது சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். சர்வதேச போட்டிகள், இந்திய ஐபிஎல் போட்டிகள் என பல போட்டிகளில் இவரது ஆட்டம் முக்கியத்துவம் பெற்றது.

தற்போதும் இலங்கை அணியின் முன்னணி வீரராக இருக்கும் ஏஞ்சலா மேத்யூஸ் 2013 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்.

இவரது அழகிய காதல் கதை குறித்து பார்ப்போம்,

ஏஞ்சலோ மேத்யூஸின் தந்தை Tyronne Mathews ஒரு கிரிக்கெட் பயிற்சியாளர் ஆவார். இதனால் சிறுவயதில் இருந்து மேத்யூஸ்க்கு கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் இருந்த காரணத்தால் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

தனது 19 வயதில் வருங்கால மனைவி ஹெஷானியை முதல் முறையாக மேத்யூஸ் சந்தித்துள்ளார்.

ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். அதன்பின்னர் இருவரும் ஒருவரையொருவர் காதலித்த தொடங்கியுள்ளனர். காதலை வெளிப்படுத்தியது முதலில் மேத்யூஸ்தான்.

நான் உன்னை காதலிக்கிறேன், நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என மேத்யூஸ், ஹெஷானியுடம் கேட்டபோது, பதில் எதுவும் தெரிவிக்காமல் வீட்டுக்கு வந்துவிட்டார் ஹெஷானி.

வீட்டிற்கு வந்த அவர், உடனே தனது அம்மாவிடம்.....மேத்யூஸ் என்னை பிடித்திருக்கிறது என கூறினார் என தெரிவித்துள்ளார். இதனை கேட்ட அம்மா, தனது மகள் மிகவும் ஒழுக்கத்துடன் வளர்ந்துள்ளார் என பெருமிதம் கொண்டுள்ளார்.

பின்னர் இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதை உணர்ந்துகொண்ட அம்மா, திருமணம் செய்துவைக்க முடிவுசெய்ததையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் பம்பளப்பட்டியில் உள்ள செயிண்ட் மேரிஸ் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் அரசியல்வாதிகள், பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2017 ஆம் ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers