ஆர்யாவை ஒரு தலையாக காதலித்த அபர்ணதியின் உருக்கமான பதில்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

பிரபல நடிகர் ஆர்யாவுக்கும், சாயிஷாக்கும் வருகிற மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.

பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் என சாயிஷாவின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அனைவரது மனதிலும் இடம்பிடித்த அபர்ணதி, ஆர்யாவை ஒரு தலையாக காதலித்தார்.

ஆனால், ஆர்யா இதுகுறித்து எதுவும் பேசவில்லை. இந்நிலையில் ஆர்யாவின் திருமணம் குறித்து கூறியுள்ள அபர்ணதி, திருமணம் நடந்தால் சந்தோஷம், இனிமேல் ஆர்யா - அபர்ணதி என்ற பேச்சுக்கள் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

அதிலிருந்து மீண்டு எனது நடிப்பில் கவனம் செலுத்தவிருக்கிறேன், என்னை திருமணத்துக்கு அழைத்தால் சென்று வாழ்த்திவிட்டு சாப்பிட்டுவிட்டு வருவேன், ஆனால் மொய் வைக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

மேலும், முன்பு கூட ஆர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்றேன், ஆனால் இனிமேல் வாய்ப்பு கிடைத்தால் நடிக்கமாட்டேன், ஏனெனில் ரொமாண்டிக்காக பேசி பழகி நான் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை என உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்