திருமணத்தில் பக்கா தமிழ் பெண்ணாக ஜொலித்த செளந்தர்யா ரஜினிகாந்த்! அவர் அணிந்திருந்த காஸ்ட்யூம்ஸ்-நகைகள் என்னென்ன தெரியுமா?

Report Print Santhan in உறவுமுறை

பிரபல திரைப்பட நடிகரான ரஜினி மகள் செளந்தர்யாவின் மறுமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான், கடந்த இரண்டு தினங்களாக சமூகவலைத்தளங்களில் வைரலாகின.

ஏனெனில் இந்த திருமணத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் உலகின் கோடீஸ்வரர்களின் பட்டியலில் இருக்கும் முகேஷ் அம்பானி அவரது மனைவி நீட்டா அம்பானி ஆகியோர் கலந்து கொண்டது பெரிய அளவில் பேசப்பட்டது.

இப்படி சமூகவலைத்தளங்களில் டிரண்டாகிய செளந்தர்யா-விசாகன் திருமணத்தில் அவர்கள் அணிந்திருந்த உடை மற்றும் சில முக்கிய விஷயங்களை இங்கே பார்ப்போம்.

கடந்த 11-ஆம் திகதி நடைபெற்ற இவர்களின் திருமணம் சுமங்கலி பூஜையோடு தொடங்கியது. முதலில் இரு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட சங்கீத் மற்றும் மெஹெந்தி விழா நடைபெற்றது.

இந்த விழாவின் போது செளந்தர்யா ஆக்வா நீல நிறத்தில் கற்கள் பதித்த லெஹெங்கா சோலி, அதற்கு மேட்சாக சோக்கர் மற்றும் டாங்கலர் காதணியில் மிளிர்ந்தார்.

மணமகன் விசாகன், வேஷ்டி மற்றும் பிரவுன் நிறச் சட்டை உடுத்தி எளிமையான தோற்றத்தில் இருந்தார்.

இதைத் தொடர்ந்து நடந்த மாப்பிள்ளை அழைப்பு சடங்கின் போது, சிவப்பு மற்றும் தங்க நிற ஜரிகை பார்டர்கொண்ட பச்சை நிறப் புடவை, மாங்காய் டிசைன் நெக்லஸ், முத்துகள் பதித்த நீண்ட ஆரம், அதற்கு மேட்சான சாண்ட்பாலி வகை காதணி மற்றும் நெத்திச்சூடி என பார்க்காவே ஒரு பக்கா தமிழ் பெண்ணாக செளந்தர்யா ஜொலித்தார்.

இவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நீலம், தங்கம் மற்றும் ஆரஞ்சு நிற காம்பினேஷனில் பட்டுப்புடவையை செளந்தர்யா தேர்வு செய்திருந்தார்.

விசாகன் வெள்ளை வேஷ்டி-சட்டையைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் லதா ரஜினிகாந்த் இருவரும் பச்சை நிறப் புடவையைத் தேர்வுசெய்திருந்தனர் என்பது தான் ஹைலைட்.

செளந்தர்யாவின் திருமணத்திற்கு ஆடைவடிவமைப்பாளராக இந்தியாவைச் சேர்ந்த அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லா ஆகியோர் தான் வடிவமைத்திருந்தனர்.

இவர்களின் கைவண்ணத்தின் உருவான கனமான கற்கள் பதித்த பிங்க் நிற புடவை அதற்கு மேட்சாக வெள்ளைக் கற்கள் பதித்த நெக்லஸ், ஆரம், காதணி, மாத்தாப்பட்டி மற்றும் வளையல் போன்றவற்றை அணிந்து அவர் முகூர்த்த நேரத்தில் வந்த போது அழுகு தேவையாக தெரிந்தார்.

திருமணத்தைத் தொடர்ந்து திரைப்பட நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்ட வரவேற்பு நிகழ்ச்சியில், சிவப்பு லெஹெங்கா சோலி, கனமான சோக்கர், காதணி, நெத்திச்சூடி, எளிமையான சிகை அலங்காரம் என கொஞ்சம் சிம்பிளாக இருந்தாலும், பார்க்க அழகாக தெரிந்தார்.

செளந்தர்யா இப்படி என்றால், விசாகன் கறுப்பு-வெள்ளை வெஸ்டர்ன் சூட்டில் மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்