ரஜினிகாந்தின் மருமகன் விசாகன் பற்றிய தகவல்கள்.... சௌந்தர்யாவுடன் காதல் மலர்ந்தது எப்படி?

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா - விசாகன் திருமணம் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது.

திருமணத்தில் திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

சௌந்தர்யா தனது மகன் வேத் கிருஷ்ணாவை தன்னுடன் வைத்துக்கொண்டு தாலிகட்டிக்கொண்டார். இந்த திருமணத்தில் மகன் வேத் கிருஷ்ணா அனைவரது கவனத்தையும் பெற்றார். மேலும், தனது மெகந்தி டிசைனில் கூட தனது மகனின் பெயர் எழுத்தை வரைந்துள்ளார் சௌந்தர்யா.

சௌந்தர்யா - விசாகன் ஆகிய இருவரும் ஏற்கனவே விவாகரத்தானவர்கள். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் சந்தித்துக்கொண்ட இவர்கள் நண்பர்களாகி, பின்னர் காதல் மலர்ந்து திருமணம் செய்துகொண்டனர்.

`கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் விசாகனும், செளந்தர்யாவும் முதல் முறையாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் நட்பாக பழகிய இவர்கள் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துவிட்டது. நாம் இருவரும் ஒரே அலைவரிசை எண்ணம் கொண்டவர்கள் என்பதால், நாம் ஏன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என இருவரும் பேசிக்கொண்டனர்.

தங்களின் விருப்பத்தை இரு வீட்டார்களிடமும் தெரியப்படுத்தினர். பிறகு, இரு குடும்பத்தாரும் சந்தித்துப் பேசி இவர்களின் திருமணத்தை நடத்திவைத்துள்ளார்கள்.

யார் இந்த விசாகன்?

விசாகன் அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தவர். ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள விசாகன், படத்தயாரிப்பு நிறுவனமும் நடத்துகிறார்.

சௌந்தர்யாவின் முதல் கணவர் அஸ்வினுக்கும் நெருங்கிய நண்பர் விசாகன் ஆவார்.

விசாகன் கனிகா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். பின்னர் திரைப்பட தயாரிப்பாளர் வருண் மணியனை கனிகா திருமணம் செய்து கொண்டார்.

நடிகை த்ரிஷா மணம்முடிக்க நிச்சயம் செய்யப்பட்டு இருந்தவர்தான் வருண் மணியன். அவர்களது திருமணம் நடைபெறவில்லை. இதையடுத்து கனிகாவை வருண் மணியன் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்