தமிழ், தெலுங்கு பட உலகில் 1970 மற்றும் 80-களில் முன்னணி நடிகையாக இருந்த சரிதா, மலையாள நடிகர் முகேசை காதல் திருமணம் செய்து பின்னர் பிரிந்து விட்டார்.
தனது கணவரின் இரண்டாவது திருமணம் மற்றும் தனது வாழ்க்கை குறித்து சரிதா பகிர்ந்துகொண்டதாவது,
கணவர் முகேஷ் எனக்கு ஆதரவாக இல்லை. அவர் எனக்கு சரியானவர் இல்லை என்பது தாமதமாகத்தான் தெரிந்தது. ஆனால், கடவுள் தங்கம் மாதிரி இரண்டு குழந்தைகளை கொடுத்து இருக்கிறார்.
அது எனக்கு போதுமானது.
எனக்கு விவாகரத்து கொடுக்காமலேயே முகேஷ் வேறு திருமணம் செய்து கொண்டார். மோசடி செய்து விவாகரத்து பத்திரம் வாங்கி கொண்டார்.
அவர் செல்வாக்கு மிகுந்த மனிதர். வழக்கு தொடர்ந்தாலும் அவரை என்னால் எதுவும் செய்ய முடியாது. நீ கேரளாவில் என்னை எதுவும் செய்ய முடியாது என்று நேரடியாக சவால் விட்டார்.
அந்த விஷயத்தை கடவுளிடமே விட்டு விட்டேன். என் 2 மகன்கள்தான் எனது தைரியம். அவர்களுக்காக வாழ்கிறேன்.
இந்த விஷயத்தில் நான் வழக்கு போட்டு இருந்தால் 7 வருடம் அவர் சிறையில் இருந்து இருப்பார். ஆனால் அப்படி செய்ய வில்லை என கூறியுள்ளார்.