பிரபல நடிகை பிரியா பவானி சங்கரின் காதலன்! யார் அவர் தெரியுமா?

Report Print Fathima Fathima in உறவுமுறை

கல்யாணம் முதல் காதல் வரை புகழ் பிரியா பவானி சங்கர் குறுகிய காலத்திலேயே மக்களின் மனதை வென்றவர்.

ஒரே சீரியல் மூலம் இளசுகள் முதல் பெரிசுகள் மனதில் இடம்பிடித்த பிரியா பவானி சங்கர், கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

துள்ளலான நடிப்பால் படங்கள் வரிசை கட்ட, இவர் ஆண் நண்பர் ஒருவருடன் எடுத்த புகைப்படங்கள் வைரலாகின.

இருவரும் காதலிப்பதாகவும், திருமணமே செய்து கொண்டதாகவும் வதந்திகள் வலம் வந்தன.

ஆனால் இதற்கெல்லாம் பிரியாவின் தரப்பிலிருந்து பதிலும் வரவில்லை, மறுப்பும் வரவில்லை.

யார் அவர்? என அலசி ஆராய , ராஜ்வேல் என்பதும், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வேலை செய்வதும் தெரியவந்தது.

வண்டலூரில் இருக்கும் கிரசண்ட் கல்லூரியில் படித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டதாம், நாளடைவில் ராஜ்வேலை பிரியாவின் குடும்பத்தாருக்கு பிடித்துப் போக காதல் மலர்ந்ததாம்.

கல்லூரி முடிந்தபின்னர் மீடியா துறைக்கு பிரியா வர, ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார் ராஜ்வேல்.

சமீபத்தில் கூட ராஜ்வேலின் பிறந்துநாளுக்கு வாழ்த்து சொன்ன பிரியா, 'எல்லோரும் என்னை விட்டுப் போகும்போது நீ மட்டும் எல்லாவற்றையும் எனக்காக அளவின்றிக் கொடுக்கிறாய், நேர்மையான உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன்' என உருகியிருக்கிறார்.

இதற்கு பதிலான நீ எனக்கு பெஸ்ட் மா என பதிலளித்திருக்கிறார் ராஜ்வேல்.

காதலர் தினம் நெருங்கும் வேளையில் முதன்முறையாக மனம் திறந்திருக்கிருக்கும் பிரியாவால் அவரது ரசிகர்களும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers