8 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்துகொண்டேன்: மனம் திறந்த நடிகை ராதிகா ஆப்தே

Report Print Kabilan in உறவுமுறை

பிரபல நடிகை ராதிகா ஆப்தே 8 ஆண்டுகளுக்கு முன்பே லண்டனை சேர்ந்த இசைக் கலைஞரை திருமணம் செய்து கொண்டதாகவும், தனது திருமணம் பற்றி பலருக்கும் தெரியாது என தெரிவித்துள்ளார்.

தமிழ், ஹிந்தி மொழிப் படங்களில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. இவருக்கு திருமணம் ஆன விடயம் பலருக்கும் தெரியாது. எனினும், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

ராதிகா ஆப்தேவின் கணவர் லண்டனை சேர்ந்த பெனடிக் எனும் இசைக்கலைஞர் ஆவார். இந்நிலையில் தனது திருமண வாழ்க்கை குறித்து ராதிகா ஆப்தே கூறுகையில்,

‘நானும், பெனடிக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பதிவு திருமணம் செய்துகொண்டோம். இப்போது கூட பலருக்கு நாங்கள் திருமணம் செய்துகொண்டது தெரியாது. மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும்.

நானும், எனது கணவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக பாசம் வைத்துள்ளோம். எங்களுக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தகராறுகள் வருவதுண்டு. ஆனாலும் அவை சிறிது நேரம் தான் இருக்கும். சண்டை போட்டால் உன்னுடன் பேச விருப்பம் இல்லை என்றோ, சிறிது நேரம் கழித்து பேசுவோம் என்றோ சொல்வது இல்லை.

சில நிமிடங்களிலேயே இருவரும் பேசிவிடுவோம். யார் மீது தவறு இருந்தாலும் இருவருமே மன்னிப்பு கேட்டுக்கொள்வோம். கணவனும், மனைவியும் சண்டை போட்டுக்கொண்டு நீண்ட நாட்கள் பேசாமல் இருந்தால் பிரச்சனைகள் பெரிதாகி விடும்.

சண்டையை மனதில் வைத்துக்கொள்ளாமல் மறந்துவிடுவோம். எனக்கும், எனது கணவருக்கும் எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. நீ என்னை மதிக்கவில்லை. முக்கியத்துவம் தரவில்லை என்றெல்லாம் ஒருமுறை கூட கூறியது இல்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers