கோஹ்லியை புகழ்ந்து தள்ளிய மனைவி அனுஷ்கா

Report Print Kabilan in உறவுமுறை

என் கணவரிடம் பாசாங்கு என்பதே கிடையாது என நடிகையும், இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கோஹ்லியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை அனுஷ்கா ஷர்மா, தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது கணவர் கோஹ்லி குறித்து பெருமையாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘என் கணவருடைய நேர்மையை நான் மிகவும் மதிக்கிறேன். நான் ஒரு நேர்மையான பெண்.

அதனாலேயே பல பாதிப்புகளை அடைந்துள்ளேன். அவரும் அநியாயத்திற்கு நேர்மையானவர் தான். அவரைப் போன்ற ஒருவரை என் வாழ்வில் சந்தித்ததை எண்ணி மகிழ்கிறேன்.

நாங்கள் இருவருமே எங்கள் வாழ்வை முழுமையான நேர்மையுடன் தான் வாழ்கிறோம். அது மிகவும் வெளிப்படையானது, சரியானது. என்னுடைய வாழ்க்கைத் துணையிடம் பாசாங்கு என்பதே கிடையாது. அவரிடம் எல்லாமே நிஜமானது.

நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் நன்கு ஆதரவளித்துக் கொள்வோம். தனிப்பட்ட முறையிலும், தொழிலிலும் தன்னை மேம்படுத்திக் கொள்ள அவர் எப்போதும் முயல்வார்.

நானும் அப்படித்தான். நாங்கள் எங்களை சீரியஸாக எடுத்துக் கொள்ளமாட்டோம். பொதுமக்களைப் போலத்தான் நாங்களும். அதனால் தான் எல்லோரிடமும் நன்கு பழகுகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்