கூட்டு எண் 2 (11, 20, 29) இல் பிறந்தவர்களுக்கு இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும்: இதயம் சொல்வதை கேட்பவர்கள்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

2ம் எண் நபர்கள், மிகவும் உணரச்சி மிக்கவர்கள். மனநிலையில் மாறுபாடு கொண்டவர்கள். அவர்கள் துணையுடன் மனநல ரீதியான தொடர்பு உள்ளவர்கள்.

அவர்கள் உடல் ரீதியான தொடர்பை விட மன ரீதியான தொடர்பு மிகவும் முக்கியம் என்று நினைப்பவர்கள். இந்த நபர்கள், உணர்திறன் அதிகம் கொண்டவர்கள் மற்றும் உயர்ந்த கற்பனைத் திறன் கொண்டவர்கள். இவர்களுக்கு அடிக்கடி மனநிலையில் மாற்றம் உண்டாவதால் இவர்களின் துணை நிலையான மனநிலையுடன் இருப்பது நல்லது. இவர்களைப் புரிந்து கொள்ளும் துணை அமைந்தால் மட்டுமே, இவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை மிகவும் திருப்திகரமாக அமையும்.

இவர்களுக்கு சிற்றின்பத்தின் மேல் அதிக ஆர்வம் இருப்பதில்லை. காதல், ரொமான்ஸ் மற்றும் திருமணம் என்று வரும்போது இவர்கள் இதயம் சொல்லும் வழியில் மட்டுமே இவர்கள் பயணிக்கின்றனர்.

இவர்கள் மன்மத கலையில் மிகச் சிறந்து விளங்குபவர்கள். இவர்களுடைய சொந்த வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதால் மட்டுமே இவர்களின் தொழிலும் நல்ல முறையில் நடக்க இயலும், காரணம், இவர்கள் சந்தோஷமாக இருந்தால் இவர்களுடைய வேலை சிறப்பாக நடைபெறும்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்